மத்திய அரசைக் கண்டித்து நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசைக் கண்டித்து நாமக்கல்லில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2022-05-28 03:00 GMT

மத்திய அரசைக் கண்டித்து நாமக்கல்லில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல் பார்க் ரோடு முன்பு மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து, கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஎம், சிபிஐ, சிபிஐஎம்எல். விசிகே சார்பில் ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கைகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு, அரசு நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்யக்கூடாது, அத்தியாவசியபொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், ரேசன் கடைகள் மூலம் அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும்வழங்கிட வேண்டும், வருமான வரி வரம்பை எட்டாத அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் ரூ 7,500 வழங்கிட வேண்டும். ஊரகவேலை உறுதி திட்டத்திற்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் கந்தசாமி. விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் மணிமாறன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர் முருகராஜ். நகர செயலாளர் சுந்தரம், சிவகுமார், வெங்கடேசன், பாலு, வணங்காமுடி, வேலுசாமி, தங்கமணி, ஜெயமணி, சுரேஷ் உள்ளிட்டபலர்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News