கொங்குநாடு மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி

கொங்குநாடு மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்து உள்ளது.

Update: 2024-05-06 03:34 GMT

வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு பள்ளியில், பிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்த மாணவ மாணவிகளை, பள்ளி நிர்வாகிகள் பாராட்டி பரிசுவழங்கினார்கள்.

வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், இந்த ஆண்டு பிளஸ் 2 படித்து, பொதுத்தேர்வு எழுதிய அனைத்து மாணவ மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளது. இந்த  பள்ளி தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி சாதனையைப் பெற்றுள்ளது. கொங்குநாடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவி தர்ஷினிஜெயஷிகா 600க்கு 588 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார். மாணவர் பூபதி 600க்கு 591 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், மாணவி தனுஷிகா 579 மதிப்பெண்கள் பெற்று 3ம் இடத்தையும் பெற்று சாதனை படத்துள்ளனர்.

மேலும் இப்பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய 131 மாணவர்களில், 50 பேர் 600க்கு 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். மாணவ மாணவிகள் பாடவாரியாக பெற்ற அதிக மதிப்பெண்கள்: தமிழ் 98, ஆங்கிலம் 99, கணிதம் 99, இயற்பியல் 99, வேதியியல் 99, கம்ப்யூட்டர் சயின்ஸ் 100, உயிரியல் 99, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல் 98, பொருளியல் 98, வணிகவியல் 100, கணக்குப்பதிவியல் 100, கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் 97.

கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் 15 பேரும், வணிகவியலில் 4 பேரும் , கணக்குப் பதிவியலில் ஒருவரும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சிபெற்று, சாதனை படைத்த மாணவ மாணவிகளை கொங்குநாடு கல்வி நிறுவனங்களின் தாளாளர் டாக்டர் ராஜன், மெட்ரிக் பள்ளியின் ஆலோசகர் ராஜேந்திரன், தலைவர் ராஜா, செயலாளர் சிங்காரவேலு, இயக்குநர் ராஜராஜன், முதல்வர் சாரதா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

Similar News