சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் பணியை தடுத்து நிறுத்த கோரிக்கை

Namakkal news- கேரள அரசு சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் பணியை, உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று விவசாயிகள் சங்கத் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2024-05-23 10:15 GMT

Namakkal news- தமிழக விவசாயிகள் சங்க தலைவர் நாமக்கல் வேலுசாமி.

Namakkal news, Namakkal news today- கேரள அரசு சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் பணியை, தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று விவசாயிகள் சங்கத் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து, நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் நாமக்கல் வேலுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

அமராவதி அணையின் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றாக, கேரளாவில் இருந்து பாயும் சிலந்தி ஆறு உள்ளது. இந்த ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியை எவ்வித அனுமதியும் இன்றி கேரள அரசு தற்போது தொடங்கியுள்ளது. இதனால் அமராவதி அணைக்கு நீர்வரத்து வரத்து குறைந்து, அமராவதி அணையின் பாசன விவசாயிகள் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும். எனவே அமராவதி அணை பாசன விவசாயிகள் நலன் கருதி, அனுமதி பெறாமல் சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட கேரள அரசு தொடங்கியுள்ள பணியை தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என அவர் கூறியுள்ளார். 

Tags:    

Similar News