ப.வேலூர் தேசிய வேளாண் மார்க்கெட்டில் கொப்பரை ஏலம்

ப.வேலூர் தேசிய வேளாண் மார்க்கெட்டில், ரூ. 5.34 லட்சம் மதிப்பிலான கொப்பரைத் தேங்காய் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது.

Update: 2024-06-14 06:15 GMT

ப.வேலூர் தேசிய வேளாண் மார்க்கெட்டில் கொப்பரை ஏலம் - கோப்புப்படம்

நாமக்கல் மாவட்டம், ப.வேலூர் வெங்கமேட்டில் உள்ள தேசிய வேளாண்மை மார்க்கெட்டில் வாரம்தோறும் வியாழக்கிழமை கொப்பரைத் தேங்காய் ஏலம் நடைபெறும். ப.வேலூர் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தேங்காய்களை உடைத்து, அதை உலர்த்தி வியாழன் தோறும் வெங்கமேட்டில் உள்ள தேசிய எலக்ட்ரானிக் வேளாண் மார்க்கெட்டில் கொண்டு வந்து ஏலம் மூலம் விற்பனை செய்து வருகின்றனர்.

கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 5,890 கிலோ கொப்பரை தேங்காயை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். ஏலத்தில் அதிகபட்சமாக முதல் தரம் கிலோ ஒன்று ரூ. 93.19 க்கும், குறைந்தபட்சமாக ரூ. 90.79 க்கும், சராசரியாக ரூ. 92.99 க்கும் ஏலம் போனது. இரண்டாம் தரம் அதிகபட்சமாக ரூ. 86.99 க்கும், குறைந்தபட்சமாக ரூ. 79.39 க்கும், சராசரியாக ரூ. 84.69 க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 3 லட்சத்து 98 ஆயிரத்து 540 க்கு வர்த்தகம் நடைபெற்றது.

இந்த வாரம் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 6,345 கிலோ கொப்பரையை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் முதல் தரம் அதிகபட்சமாக கிலோ ஒன்றுக்கு ரூ.91.66க்கும், குறைந்தபட்சமாக ரூ. 88.99க்கும், ஏலம்போனது. இரண்டாம் தரம் அதிகபட்சமாக ரூ. 85.89 க்கும், குறைந்தபட்சமாக ரூ. 76.19 க்கும், சராசரியாக ரூ. 84.69க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 5 லட்சத்து 34 ஆயிரத்து 234 க்கு ஏலம் மூலம் விற்பனை நடைபெற்றது.

Tags:    

Similar News