நாமக்கல்லில் 21ம் தேதி திருநங்கைகளுக்கான சிறப்பு நலத்திட்ட உதவிகள் முகாம்

நாமக்கல்லில் வரும் 21ம் தேதி திருநங்கைகளுக்கான சிறப்பு நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாம் நடைபெறுகிறது.

Update: 2024-06-14 02:15 GMT

பைல் படம் 

நாமக்கல்லில் வரும் 21ம் தேதி திருநங்கைகளுக்கான சிறப்பு நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாம் நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

திருநங்கைகளின் நலனை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு ஒரே இடத்தில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிடும் வகையில், அரசுத் துறைகளின் சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கல் மற்றும் திருநங்கைகளின் விவரங்களை பதிவு செய்து அடையாள அட்டை, முதலமைச்சரின் விரிவான மருத்துவ இன்சூரன்ஸ் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கிட, சிறப்பு முகாம் வருகிற 21ம் தேதி, நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருநங்கைகள் கலந்து கொண்டு, கோரிக்கை மனுக்களை அளித்து, தங்களுக்கு தேவையான அரசு உதவிகளை பெற்று பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News