ரத்தக்கொடையாளர் தினத்தை முன்னிட்டு நாமக்கல்லில் ரத்த தான முகாம்

உலக ரத்தக்கொடையாளர் தினத்தை முன்னிட்டு, நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் சிறப்பு ரத்த தான முகாம் நடைபெற்றது.

Update: 2024-06-16 01:45 GMT

நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் நடைபெற்ற உலக ரத்தக்கொடையாளர் தின விழாவில், கல்லூரி முதல்வர் டாக்டர் சாந்தா அருள்மொழி ரத்த தானம் அளித்தார்.

உலக ரத்தக்கொடையாளர் தினத்தை முன்னிட்டு, நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் சிறப்பு ரத்த தான முகாம் நடைபெற்றது.

உலக ரத்தக் கொடையாளர் தினத்தை முன்னிட்டு, நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் நடைபெற்ற சிறப்பு ரத்த தான முகாமிற்கு கல்லூரி முதல்வர் டாக்டர் சாந்தா அருள்மொழி தலைமை வகித்து ரத்த தானம் செய்வதன் சிறப்புகள் குறித்து பேசினார். நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ மாணவிகள் ரத்த தானம் குறித்த உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

பின்னர், கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, ரத்த தான முகாமை துவக்கி வைத்து, முதலாவாவதாக அவர் ரத்த தானம் அளித்தார். தொடர்ந்து 50க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் அளித்தனர். ரத்த தானம் வழங்கியவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் குணசேகரன், உள்ளுறை மருத்துவர் கண்ணப்பன் , ரத்த வங்கி மருத்துவ அலுவலர் அன்பு மலர் , ரெட்கிராஸ் மாவட்ட செயலர் ராஜேஸ் கண்ணன் மற்றும் திரளான டாக்டர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News