சம்பள ஒப்பந்த பேச்சுவார்த்தை உடனே துவங்க அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கம் கோரிக்கை

சம்பள ஒப்பந்த பேச்சுசுவார்த்தையை உடனே துவங்க வேண்டும் என்பதை வலியுறத்தி அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2024-06-16 01:15 GMT

பைல் படம் 

சம்பள ஒப்பந்த பேச்சுசுவார்த்தையை உடனே துவங்க வேண்டும் என்பதை வலியுறத்தி அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக சிஐடியு ஊழியர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, விளக்க கூட்டம், நாமக்கல் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு நடைபெற்றது. சி.ஐ.டி.யு., உதவி தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் வேலுசாமி, பொதுச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, கிளை செயலாளர் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட உதவி தலைவர் ஜெயக்கொடி கோரிக்கை குறித்து விளக்கி பேசினார்.

போக்குவரத்து கழங்களில் வரவுக்கும், செலவிற்குமான வித்தியாசத் தொகையை பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி மானியமாக வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர்களை வெறுங்கையுடன் வீட்டுக்கு அனுப்பக் கூடாது பணப்பலன்களை கொடுத்து அனுப்ப வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு நிறுத்தப்பட்ட அகவிலைப்படி உயர்வை உடனே வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியத்தை முறைப்படுத்த வேண்டும்.

தேர்தல் வாக்குறுதி அடிப்படையில், புதிய பென்சன் திட்டத்தை கைவிட வேண்டும். சம்பள ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே துவங்க வேண்டும். காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்பவை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

Similar News