ஜல்ஜீவன் குடிநீர் திட்டத்தில் சிறப்பான செயல்பாடு; நாமக்கல் மாவட்டத்திற்கு தேசிய அளவில் 4வது பரிசு

Namakkal news- ஜல்ஜீவன் குடிநீர் திட்டத்தின் கீழ், அதிக அளவில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கியமைக்காக, நாமக்கல் மாவட்டத்திற்கு தேசிய அளவில் 4வது பரிசு வழங்கப்பட்டுள்ளது.

Update: 2024-06-14 08:45 GMT

Namakkal news- ஜல்ஜீவன் குடிநீர் திட்டத்தை சிறந்த முறையில் செயல்படுத்தி, நாமக்கல் மாவட்டம் தேசிய அளவில் 4ம் இடம்பெற்றுள்ளது. சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இதற்கான விருதினை தலைமை செயலாளர் சிவ்தாஸ்மீனா, நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமாவிடம் வழங்கினார்.

Namakkal news, Namakkal news today- ஜல்ஜீவன் குடிநீர் திட்டத்தின் கீழ், அதிக அளவில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கியமைக்காக, நாமக்கல் மாவட்டத்திற்கு தேசிய அளவில் 4வது பரிசு வழங்கப்பட்டுள்ளது.

சென்னை தலைமை செயலகத்தில், மாவட்ட கலெக்டர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். அப்போது, 1.10.2022 முதல் 30.9.2023 வரையிலான காலகட்டத்தில், ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி, தேசிய அளவில் 293.14 புள்ளிகள் பெற்று 4வது இடம் பெற்ற, நாமக்கல் மாவட்டத்தை பாராட்டி, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமாவிடம் விருது வழங்கினார்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 15 ஊராட்சி ஒன்றியங்களில், 322 கிராம பஞ்சாயத்துகளுக்கு உட்பட்ட, 2,520 குக்கிராமங்களுக்கும் ஜல் ஜீவன் மிஷன் திட்டம், மற்றும் ஒருங்கிணைத்த 14 மற்றும் 15-வது நிதிக்குழு ஆகிய திட்டங்களின் மூலம் மொத்தமுள்ள 3,52,086 வீடுகளில் இதுவரை 3,47,996 வீடுகளுக்கு (98.84 சதவீதம்), தனி நபர் வீட்டு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 4,090 வீடுகளுக்கும் இம்மாதம் 30ம் தேதிக்ககுள் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும்.

நாமக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து குக்கிராமங்களுக்கும் 1.10.2022 முதல் 30.09.2023 வரை 3,28,159 வீடுகளுக்கு தனி நபர் வீட்டு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு தற்போது உள்ள 4,444 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மற்றும் 380 தரை மட்ட நீர்த்தேக்கத் தொட்டிகள் மூலம் பஞ்சாயத்துகளின் சொந்த குடிநீர் ஆதாரங்கள் மற்றும் 14 கூட்டு குடிநீர் திட்டங்கள் மூலமாகவும், கொல்லிமலை ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் சொந்த குடிநீர் ஆதாரங்கள் மூலமாகவும், தனி நபருக்கு நாள் ஒன்றுக்கு 55 லிட்டர் குடிநீர் என்ற அளவில் தனிநபர் இல்ல குடிநீர் இணைப்பு மூலம், பாதுகாப்பான குடிநீர் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் 98 புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மற்றும் ஒருங்கிணைந்த நிதிக்குழு திட்டத்தில் 418 புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டுவதற்கான நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு 441 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டுதல் பணிகள் முடிவுற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இதற்காக தேசிய அளவில் 4 -வது தர வரிசை விருது நாமக்கல் மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

எனவே, இதுபோன்ற அரசின் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி, நாமக்கல் மாவட்டத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல பொதுமக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags:    

Similar News