நாமக்கல்லில் பருத்தி ஏலம்: ரூ.21 லட்சம் மதிப்பில் விற்பனை

நாமக்கல் வேளாண்மை கூட்டுறவு சொசைட்டியில் ரூ. 21 லட்சம் மதிப்பிலான பருத்தி ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது.

Update: 2021-10-06 11:30 GMT

கோப்பு படம்

நாமக்கல் - திருச்செங்கோடு ரோட்டில், கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி (என்சிஎம்எஸ்) செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. நாமக்கல், மோகனூர், எருமப்பட்டி, சேந்தமங்கலம், புதுச்சத்திரம், பரமத்தி, கபிலர்மலை உள்ளிட்ட பகுதிகளைச்சேர்ந்த விவசாயிகள் 850 பருத்தி மூட்டைகளை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

சங்கத்தில் நடைபெற்ற நேரடி ஏலத்தில் சேலம், எடப்பாடி, கொங்கணாபுரம், திருச்செங்கோடு, ஈரோடு, அவிநாசி , திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டு, பருத்தியை கொள்முதல் செய்தனர். இதில், ஆர்சிஹெச் ரகம் ரூ. 6,760 முதல் ரூ. 9,000 வரையிலும், சுரபி ரகம் ரூ. 7,670 முதல் ரூ. 10,069 வரையிலும், கொட்டு ரகம் ரூ. 3,699 முதல் ரூ. 5,640 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 21 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.

Tags:    

Similar News