பள்ளிக்கல்வித்துறை மூலம் 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை துவக்கி வைத்த சிஇஓ

Latest News in Education Department - நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் துவக்கி வைத்தார்.

Update: 2022-06-28 01:45 GMT

1 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தின்கீழ், சிஇஓ மகேஸ்வரி முதல் மரக்கன்றை, வெண்ணந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மகேஷ்குமாரிடம் வழங்கினார்.

Latest News in Education Department -நாமக்கல் மாவட்ட தேசிய பசுமைப்படை சார்பாக, நம்ம நாமக்கல் பசுமை நாமக்கல் திட்டத்தின் கீழ் பள்ளிக்கல்வித்துறைக்கு 1 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2022-23 கல்வி ஆண்டில் நாமக்கல் மாவட்டத்தில், பள்ளிகளுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கும் திட்டத்தை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தொடங்கி வைத்து, முதல் மரக்கன்றை வெண்ணந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் மகேஷ் குமாரிடம் வழங்கினார். இனி அனைத்து பள்ளிகளுக்கும் தேவையான மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ரகுநாத் செய்திருந்தார்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News