கரூர் வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு மாவட்ட திமுக சார்பில் வரவேற்பு

கரூருக்கு வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு, மாவட்ட திமுக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

Update: 2022-02-09 00:30 GMT

உதயநிதியை வரவேற்ற அமைச்சர் செந்தில் பாலாஜி. 

கரூர் மாவட்டத்தில்,  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் - 2022ல் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, திமுக  இளைஞரணிச்  செயலாளரும் - சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்ய உள்ளார்.

இதற்காக கரூருக்கு வந்த அவரை, மாவட்ட திமுக சார்பில், மாவட்ட செயலாளரும் அமைச்சருமான செந்தில் பாலாஜி மற்றும் திமுக நிர்வாகிகள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

Tags:    

Similar News