வ.உ.சிதம்பரனார் பிறந்தநாள்: பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை

வ.உ.சி. பிறந்தநாளையொட்டி கரூரில் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தி, அன்னதானம், ரத்ததானம் வழங்கினர்

Update: 2021-09-06 05:39 GMT

வ.உ.சி. பிறந்தநாளையொட்டி கரூரில் அவரது சிலைக்கு மரியாதை செலுத்திய பல்வேறு அமைப்பினர்

கரூரில் வ.உ சிதம்பரனார் 150 -ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தாந்தோண்றிமலையில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.  சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சிதம்பரனார் 150 -ஆவது பிறந்த நாள்விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, கரூரில் உள்ள  வ.உ.சி சிலைக்கு, வ.உ.சி பேரவை, பாஜக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.   வ.உ.சி. சுதந்திர போராட்டத்துக்கு அளித்த அளப்பரிய பங்கு குறித்து நினைவு கூரப்பட்டது. வ. உ. சிதம்பரனார் பிறந்த நாள், அரசு விழாவாக கொண்டாடப்படும், கப்பல் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருது என பல்வேறு அறிவிப்புகளை சட்டமன்ற கூட்டத் தொடரில் வெளியிட்ட தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், கரூர் மாவட்டத்தில் வ.உ.சிதம்பரனாருக்கு உருவச்சிலை வைக்கப்படும் என உறுதியளித்த, மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜிக்கும் பல்வேறு அமைப்பினர் நன்றி தெரிவித்தனர்.

Tags:    

Similar News