கரூர் மாவட்டத்தில் 2 கட்டமாக நகர்ப்புர உள்ளாட்சி தேர்தல்

கரூர் மாவட்டத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் 2 கட்டமாக நடைபெற உள்ளது என ஆட்சியர் தெரிவித்தார்.

Update: 2021-12-10 16:30 GMT

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை ஆட்சியர் பிரபு சங்கர், எஸ்பி சுந்தரவடிவேல் ஆகியோர் பார்வையிடுகின்றனர்.

கரூரில் விரைவில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக கரூர் மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

தான்தோன்றிமலை அரசு கலைக் கல்லூரியில ஆய்வு மேற்கொண்ட பிறகு ஆட்சியர் பிரபு சங்கர் கூறுகையில், கரூர் மாநகராட்சி குளித்தலை நகராட்சி, அரவக்குறிச்சி, உப்பிடமங்கலம், மருதூர், நங்கவரம் புஞ்சை தோட்டக்குறிச்சி, புலியூர், பழைய ‌ ஜெயங்கொண்ட சோழபுரம் ஆகிய பேரூராட்சிகளுக்கு முதல் கட்டமாகவும் பள்ளப்பட்டி , புகழுர் ஆகிய இரண்டு நகராட்சிகளுக்கு இரண்டாம் கட்டமாகவும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட உள்ளது என்றார்.

விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஆறு வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News