போக்குவரத்து காவலர்கள் கபசுர குடிநீர், மாஸ்க் வழங்கல்

போக்குவரத்து போலீசார் கொரோனாவை கட்டுப்படுத்த கபசுர குடிநீர், மாஸ்க் போன்றவைகளை வழங்கினர்.

Update: 2021-04-14 09:46 GMT

கபசுர குடிநீர் மற்றும் மாஸ்க் வழங்கும் போக்குவரத்து போலீசார்.

கரூர் பேருந்து நிலையத்தில் நகர போக்குவரத்து காவல் நிலையம் சார்பில் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய கபசுரக் குடிநீர் மற்றும் மாஸ்க் வழங்கப்பட்டது.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா நோய் தொற்றைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள. மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் கபசுர குடிநீர், மாஸ்க் ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக கரூர் நகர போக்குவரத்து காவல் நிலையம் சார்பில் நகர போக்குவரத்து ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையில் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களான கரூர் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று நோயிலிருந்து தற்காத்துக்கொள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய கபசுரக் குடிநீர் மற்றும் மாஸ்க் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் நகர போக்குவரத்து காவலர்கள், பொதுமக்கள் வெளியில் வரும்போது கட்டாயம் முகக் கவசம் அணிந்து வர வேண்டும். கபசுர குடிநீர் தொடர்ந்து குடித்து வரவும் பொதுமக்களை கேட்டுக் கொண்டனர்.

Tags:    

Similar News