கரூரில் திடீரென்று உயர்ந்த சினிமா டிக்கெட் விலை

ஏற்கனவே ரூ 110 க்கு விற்பனையாகி வந்த சினிமா டிக்கெட் பிப்ரவரி 1 ம் தேதி முதல் திடீரென்று ரூ 120 க்கு விற்பனையாகி வருகின்றது.

Update: 2022-02-01 16:19 GMT

கரூரில் உள்ள தியேட்டர் வாசலில் வைக்கப்பட்ட அறிவிப்பு பலகை. 

கரூர் மாவட்டத்தில் திரையரங்க உரிமையாளர்கள் இன்று திடீரென்று டிக்கெட் விலை உயர்த்தியுள்ளனர். கரூர் நகரில் அஜந்தா, எல்லோரோ, திண்ணப்பா, அமுதா, பொன் அமுதா உள்ளிட்ட 7 தியேட்டர்கள் செயல்பட்டு வரும் நிலையில், ஏற்கனவே ரூ 110 க்கு விற்பனையாகி வந்த சினிமா டிக்கெட் பிப்ரவரி 1 ம் தேதி முதல் திடீரென்று ரூ 120 க்கு விற்பனையாகி வருகின்றது.
இந்நிலையில் அனைத்து திரையரங்குகளின் முன்னாள் 01.02.2022 முதல் நுழைவு கட்டணம் ரூ 120 என்றும் Base Rate : 90.44, TMC : 4.00, LBET : 7.24 ஆக மொத்தம் ரூ 101.68 என்றும், Gst இல் CGST 9 % : 9.16, SGST 9 % : 9.16 ஆக மொத்தம் ரூ 120 க்கு விற்பனையாகி வருகின்றது என்று அனைத்து திரையரங்குகளின் வாயிற்படியில் பிளக்ஸ்கள் வைக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே கொரோனாவை காரணம் காட்டி பல மாதங்களாக மூடப்பட்ட திரையரங்குகள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திறக்கப்பட்டு, மேலும், அதிகரித்து வரும் கொரோனா மத்தியில் 50 விழுக்காடு மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் இந்த மாற்றம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

Similar News