கந்து வட்டி ஒழிப்பு தின உறுதிமொழி சமூக ஆர்வலர்கள் ஏற்பு

கந்து வட்டி வசூலிப்பது ஒழிக்கும் விதமாக கரூரில் கந்துவட்டி ஒழிப்பு தின உறுதிமொழி பல்வேறு அமைப்பினரால் ஏற்கப்பட்டது.

Update: 2021-10-23 10:30 GMT

கரூரில் கந்து வட்டி ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்கும் சமூக ஆர்வலர்கள்.

கரூரில் கந்துவட்டியை ஒழிக்கும் வகையில் இன்று கந்து வட்டி உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது. நெல்லையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர்  கந்து வட்டி கொடுமையால் இசக்கி முத்து தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் தீக்குளித்து உயிர் நீத்தார்.

இதையடுத்து, கரூரில் உள்ள சாமானிய மக்கள் நலன் கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகள் அக்டோபர் 23 ம் தேதியை கந்து வட்டி ஒழிப்பு தினம் கடைபிடித்து வருகின்றனர். இதையொட்டி, கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சாமானிய மக்கள் நலக் கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம், வாழ்க விவசாயிகள் இயக்கம், தலித் மேம்பாட்டு அமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் கந்து வட்டி ஒழிப்பு உறுதி மொழி ஏற்கப்பட்டது.

தொடர்ந்து கந்து வட்டியால் பொதுமக்கள் பாதிக்கப்படுவது மற்றும் கந்து வட்டி குறித்த புகாரில் காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பலர் பேசினர்.

Tags:    

Similar News