விலைவாசி உயர்வு: கரூரில் பல்வேறு அமைப்பினர், கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கரூரில் விலைவாசி உயர்வை கண்டித்து பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-01-24 11:33 GMT

கரூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சாமான்ய மக்கள் கட்சியினர்.  

கரூரில், சாமான்ய மக்கள் கட்சி, தமிழ் புலிகள் கட்சி, மக்கள் அதிகாரம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி லெனிஸ்ட் ரெட் ஸ்டார், மே 17 இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில்,  கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்புறம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கேஸ் விலையை 50% குறைக்க வேண்டும், தேர்தல் வாக்குறுதிபடி 100 நாள் வேலைத் திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும், வீடு, வீட்டுமனை பட்டாவை அடிப்படை உரிமையாக்கி சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

சாமான்ய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு, கோரிக்கையை வலியுறுத்தி, கண்டன கோஷங்களை எழுப்பினர். இதேபோல், விலைவாசி உயர்வை கண்டித்து, மேலும் சில அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News