குடிநீர் இணைப்பு வழங்க கோரி ஆட்சியரிடம் மனு

ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ரூ.5,200 வைப்புத்தொகை பெற்றும் குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை என புகார்.

Update: 2021-12-20 09:00 GMT

குடிநீர் இணைப்பு கோரி ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த பொதுமக்கள்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பிரபுசங்கர் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்ட மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், கரூர் மாவட்டம், கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காதப்பாறை ஊராட்சியை சேர்ந்த ராம் நகர் பகுதியில் வசிக்கும் 30க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் தங்களுக்கு முறையாக குடிநீர் இணைப்பு வழங்காமலும், பொது குழாயிலும் குடிநீர் வழங்கவில்லை என கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

குறிப்பாக ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நபரிடமும் 5,200 ரூபாய் வைப்புத்தொகை பெறப்பட்டுள்ளது. மேலும், குடிநீர் வரியாக ஒவ்வொரு வீட்டுக்கும் ஆண்டுக்கு 600 ரூபாய் பெற்றுக்கொண்டு அதற்கான ரசீதும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை வீட்டுக் குடிநீர் இணைப்பு வழங்கவில்லை எனவும், பொது குழாய் மூலம் குடிநீர் வழங்கவில்லை என தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

இதேபோல் காதப்பாறை ஊராட்சிக்குட்பட்ட மற்ற பகுதிகளிலும் இவ்வாறு வைப்புத் தொகை மற்றும் குடிநீர் வரி பெறப்பட்டுள்ளதாகவும், மேலும் மேலும் அடிப்படை வசதிகளும் முறையாக செய்து தரவில்லை என மனுவில் தெரிவித்திருந்தனர்.

Tags:    

Similar News