முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

கரூர் நகராட்சியில் மாஸ்க் அணியாமல், வந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2021-04-11 11:31 GMT

    கொரோனாவின் தாக்கம் இரண்டாவது அலையாக உருமாறி வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக, இன்று முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலாகி உள்ளது. கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. தற்போது தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகின்றது. இதனால், பாதுகாப்பு நடவடிக்கையில் அரசு அதிகாரிகள் தீவிரம் காட்டியுள்ளனர்.

இந்நிலையில், கரூர் நகராட்சி அதிகாரிகள், பேருந்து நிலையம் ரவுண்டானா அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, முகக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு அபராதம் விதித்தனர். மேலும், கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள் இடம் பெற்றுள்ள விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டறிக்கைகளை வாகன ஓட்டிகளிடம் வழங்கி அறிவுரை கூறினர்.

Tags:    

Similar News