கரூர் அருள்மிகு கரியமாலீஸ்வரர் கோவிலில் மஹா சிவராத்திரி விழா

Update: 2022-03-01 16:15 GMT

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம்


கரூர் அருள்மிகு ஸ்ரீ கரியமாலீஸ்வரருக்கு மஹா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்களும் தீபாராதனை சிறப்பாக நடைபெற்று வருகின்றது

கரூர் நகரின் மையப்பகுதியில் அமைந்து வீற்றிருக்கும் அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் தொன்று தொட்டு மிகவும் ஆன்மீக தொன்மை வாய்ந்தவையாகும், இந்நிலையில், மஹா சிவராத்திரியான இன்று இரவு முதல், கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தின் வளாகத்தின் உள் பிராகாரத்தில் வீற்று அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ கரியமாலீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள்  தொடங்கியது. இந்நிகழ்ச்சியினை முன்னிட்டு கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் மூலவருக்கும் மஹா தீபாராதனை மற்றும் பூஜைகளும் தொடங்கி நடைபெற்று வருகின்றன. பஞ்ச லிங்க தலங்களில் முதன்மை வாய்ந்த இந்த கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தின் பின்பு உட்பிராகாரத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ கரியமாலீஸ்வரருக்கு முதற்கட்ட பூஜைகள் மஹா சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்று வருகின்றது.

இதனையொட்டி, இரண்டு, மூன்று மற்றும் நான்காவது பூஜைகள் நடைபெறும் தருவாயில், கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரரையும், கரூர் அருள்மிகு ஸ்ரீ கரியமாலீஸ்வரரையும் பக்தர்கள் தரிசனம் செய்தனர்., இதனை தொடர்ந்து கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தின் வளாகத்தில் உள்ள நால்வர் அரங்கில் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்று வருவதால் பக்தர்கள் கோடிகள் அதனை கண்டு மகிழ்ந்தனர். இதற்கான முழு ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினரும், கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலய நிர்வாகமும் சிறப்பாக செய்து வருகின்றது. கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News