கரூரில் வீடுதேடி இலவசஉணவு வழங்கும் திட்டம்: அமைச்சர் தொடங்கி வைத்தார்!

கரூரில் ஏழைகளின் வீடுதேடி சென்று இலவச உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.

Update: 2021-05-30 09:36 GMT

கரூரில் ஏழைகளுக்கு இலவச உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள   ஏழை , எளிய மக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இலவசமாக உணவு வழங்க திட்டமிடப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

உணவு தேவைப்படுவோர் 9498747614 , 9498747699 என்ற எண்களில் தொடர்பு கொண்டால் அவர்களின் வீடுகளுக்கே இலவசமாக உணவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இன்று  இந்த திட்டத்தை  மின்சாரம் , மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கரூரில் உள்ள  கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தின் முன்பு தொடங்கி வைத்தார்.

3,307 நபர்கள் உணவுத்தேவை என்று தெரிவித்ததை அடுத்து அவர்களுக்கான உணவு தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டது.  ஊரடங்கு காலம் முழுவதும் 3 வேளையும் உணவு தேவைப்படும் நபர்கள் ஒருமுறை தொலைபேசியில் தொடர்புகொண்டு தெரிவித்தால் 3 வேளை   ஊரடங்கு காலம் முடியும் வரை உணவு வழங்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

Tags:    

Similar News