கரூரில் ஊரடங்கு தளவர்வால் முக்கிய சாலைகளில் நெரிசல், தொற்று பரவும் அச்சம்

கரூரில் ஊரடங்கு தளர்வால் முக்கிய சாலைகளில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்படுகிறது. இதனால் கொரோனா பரவும் அச்சம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

Update: 2021-05-23 09:30 GMT

கரூரில் ஊரடங்கு தளர்வில் அச்சம் இன்றி பொதுமக்கள் கூட்டமாக கடைவிதிகளில் பொருட்களை வாங்க குவிந்தனர்.

கரூரில் ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டதையடுத்து தினசரி சந்தைகளில் கொரோனா அச்சமின்றி, சமூக இடைவெளி மறந்து மக்கள் அதிக அளவில் வந்து செல்வதால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

  கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் தமிழகத்தில் கடந்த 10ந் தேதி அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கு 24ம் தேதியுடன் முடிவடைகிறது.

இந்நிலையில் 24ந்தேதி முதல் ஒரு வார காலத்திற்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் நேற்றும், இன்றும் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளும் திறக்க அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

 இந்த நிலையில், கரூரில் தினசரி சந்தைகளான உழவர் சந்தை மற்றும் காமராஜ் மார்க்கெட் ஆகியவற்றில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க சமூக இடைவெளியின்றி கூட்டம் கூட்டமாக கூடினர். இதனால் கொரோனா தொற்று பரவும் அச்சம் ஏற்பட்டது.

     இதனால் முக்கிய சாலைகளான பழைய பை - பாஸ் சாலை, ரயில்வே ஸ்டேசன் ரோடு, ஜவஹர் பஜார் உள்ளிட்ட சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Tags:    

Similar News