கரூர் மாநகராட்சி தேர்தல்: 2 வார்டுகளில் மட்டும் 10 வேட்பாளர்கள் கள நிலவரம்

கரூர் மாநகராட்சியின் இரண்டாவது மற்றும் மூன்றாவது வார்டுகளில் மட்டும் 10 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். +

Update: 2022-02-18 10:45 GMT

பைல் படம்.

கரூர் மக்கள் ஏராளமான தேர்தலை சந்தித்த நிலையில், மாநகராட்சியாக தற்போது தான் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். இந்நிலையில், 48 வார்டுகளில் ஒரு திமுக பெண் வேட்பாளர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், 47 வார்டுகளுக்கு மாமன்ற உறுப்பினர் பதவிக்கான தேர்தல் நாளை காலை முதல் தொடங்கி மாலை வரை நடைபெற உள்ளது.

கரூர் மாநகராட்சியின் இரண்டாவது மற்றும் மூன்றாவது வார்டுகளில் மட்டும் 10 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். இரண்டாவது வார்டு பொது வார்டு என்பதினால் சுயேட்சையாக அமீரான், நாம் தமிழர் கட்சி இளம் தமிழன், சுயேட்சை சசிகலா, பாஜக கட்சி வேட்பாளர் சண்முகசுந்தரம், சுயேட்சை வேட்பாளர் தனபால், அதிமுக கட்சி வேட்பாளர் பிரபு, சுயேட்சை வேட்பாளர் பிரேம்ராஜ், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மாதவன், தே.மு.தி.க வேட்பாளர் ரவிக்குமார், திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர் வடிவேல் அரசு ஆகிய 10 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.

இதில் அரசியல் கட்சியினை சார்ந்தவர்கள் 6 நபர்களாகவும், சுயேட்சைகளாக 4 நபர்களும் போட்டியிடுகின்றனர். இதே போல, மூன்றாவது மாமன்ற உறுப்பினராக 10 நபர்கள் போட்டியிடுகின்றனர். சுயேட்சையாக அர்ச்சுணன், பாஜக வேட்பாளராக உதயகுமார், திமுக கட்சி வேட்பாளராக சக்திவேல், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக சரவணன், சுயேட்சையாக சித்ராதேவி, சுயேட்சையாக சுபாஷ், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் செந்தில், சுயேட்சையாக ராஜா, தே.மு.தி.க வேட்பாளராக விஜயகுமார், அதிமுக வேட்பாளர் விஸ்வநாதன் ஆகிய 10 நபர்களும் போட்டியிடுகின்றனர்.

6 வேட்பாளர்கள் அரசியல் கட்சி சார்பிலும் 4 வேட்பாளர்களாக சுயேட்சையாக போட்டியிடுகின்றனர். இந்த இரு வார்டுகளிலும் மட்டுமே 10 வேட்பாளர்கள் மட்டும் போட்டியிடுவது மற்ற வார்டுகளில் 3 முதல் 9 வேட்பாளர்கள் மட்டுமே களத்தில் இருக்கின்றது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News