கரூரில் கொரோனா வீரியம் அறியாத பொதுமக்கள் ஊரடங்கில் உலா வரும் அவலம்

கரூரில் கொரோனா வீரியம் அறியாத பொதுமக்கள் ஊடரங்கில் உலவருகின்றனர். அவர்களை போலீசார் கட்டுப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-05-22 10:15 GMT

கரூர் மாவட்டம் வெங்கமேடு பகுதியில் பொதுமக்கள் கொரோனா ஊரடங்கு காலகட்டத்திலும் வெளியில் சுற்றித்திரியும் காட்சி

தீவிரமாக பரவி வரும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. கரூர் மாவட்டத்தில்  கரூர் நகர பகுதியில் பத்துக்கும் அதிகமான இடங்களில் சோதனைச் சாவடிகளை அமைத்து உள்ள போலீசார் தேவையற்ற வகையில் நகருக்குள் யாரும் நுழைவதை தடை செய்துள்ளனர். 

இந்நிலையில் கரூர் நகருக்கு அருகில் உள்ள வெங்கமேடு பகுதியில்  பலர்  கொரோனா அச்சமின்றி பலர்  சாலையில் உலா வருகின்றனர். சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கடைகளிலும் இருசக்கர வாகனம் முழுவதும் வெங்கமேடு சாலையில சுற்றி வருகின்றனர்

இதனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள் பயனற்று போய்விடும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. 

பொதுமக்கள் கடை வீதிகளில் அதிக அளவில் வலம் வருவதால் கொரோனா வைரஸ் தொற்று மேலும் பரவ வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.  வெங்கமேடு உள்ளிட்ட பொதுமக்கள் அதிக அளவில் வெளியில் வரும் பகுதிகளை காவல் துறையினர் கண்டறிந்து  கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

Similar News