திருடர்கள் ஜாக்கிரதை: 100 கேமிராக்கள் ரெடி

கரூர் நகரில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும் , கண்டறியவும் 100 கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

Update: 2021-12-06 05:30 GMT

100 கண்காணிப்பு காமிராக்களின் செயல்பாட்டை தொடக்கி வைத்து பேசுகிறார் மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி.

கரூரில், மாவட்ட வர்த்தகம் மற்றும் தொழில் கழகம் மற்றும் கரூர் மாவட்ட காவல்துறை இணைந்து கரூர் புறவழிச்சாலையில் உள்ள திருக்காம்புலியூரில் இருந்து, முக்கிய வணிக பகுதிகளான கோவை சாலை, ஜவகர் பஜார், 5 சாலை வரை 100 கண்காணிப்பு காமிரா அமைக்கப்பட்டுள்ளன. கரூரில், குற்றங்களைத் தடுக்கவும், குற்றங்களை கண்டுபிடிக்கவும் பயன்படும் இந்த காமிராக்களின் செயல்பாட்டை மின் துறை அமைச்சர் தொடங்கி வைத்து பேசினார்.

வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை அமைச்சர் சொல்லும் முன்பு முதல்வர் அந்த இடத்திற்கு சென்று ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார். கரூர் மாவட்டத்திற்கு ரூ.2000 கோடி நிதி ஒதுக்கி உள்ளார். திருப்பூருக்கு அடுத்து கரூர் தொழில் துறையில் முன்னெடுக்க முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.

வணிகர்கள் மின் இணைப்பு தொடர்பாக எந்த குறை இருந்தாலும் உடனே சொல்லுங்கள் செய்து தருகிறோம். மின்இணைப்பு கேட்டால் அடுத்த நாளே இணைப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார் முதல்வர். முதல்வர் சிந்தனை எண்ணம் எல்லாமே தமிழக வளர்ச்சி பற்றிதான் உள்ளது என பேசினார்.

நிகழ்ச்சியில், தமிழ்நாடு வணிகர்கள் சங்க பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா, கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், கரூர் காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News