முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறைதுறையினர் அதிரடி சோதனை

அதிமுக முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை, போலீசார் குவிப்பு.

Update: 2021-07-22 04:36 GMT

கரூரில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறைதுறை சோதனை நடைபெற்றுவருகிறது. சோதனையை ஒட்டி எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டின் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளார். அமைச்சராக எம்.ஆர்.விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்தபோது கோடிக்கணக்கில் சொத்துக்கள் வாங்கி குவித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சென்னையிலுள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு, நிறுவனம்,  கரூரிலுள்ள அவர் தொடர்புடைய இடங்கள் என அவருக்கு தொடர்புடைய 21 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News