இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

தமிழக அரசின் இல்லம் தேடி கல்வி குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் நடந்தது.

Update: 2021-12-11 11:15 GMT

இல்லம் தேடி கல்வி குறித்த விழிப்புணர்வு நிகழ்வு.

கொரோனா பரவல் சூழ்நிலையில் பள்ளிகள் செயல்படாத நிலையில் மாணவர்களின் கற்றல் இடைவெளியை குறைக்க தமிழக அரசு இல்லம் தேடி கல்வி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் தன்னார்வலர்கள் மூலம் நாள்தோறும் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில், மாணவர்கள் இருக்கும் இடத்துக்கே சென்று வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.

கரூர் பாலம்மாள்புரத்தில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் இல்லம் தேடி கல்வி குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ழ்ச்சி நடைபெற்றது. கரூர் வட்டரா கல்வி அலுவலர் சந்திரிகா இல்லம் தேடி கல்வியின் நோக்கம் குறித்து விளக்கி பேசினார். தொடர்ந்து கலைக் குழுவினர் இல்லம் தேடி கல்வியின் செயல்பாடுகளை ஆடல், பாடல் இசையுடன் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.

Tags:    

Similar News