கரூர் மாவட்டத்தில் முதன் முறையாக காவல்துறை சார்பில் நூலகம்

கரூர் மாவட்டத்தில் முதன் முறையாக துவக்கபட்ட இந்த திட்டத்தினை கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் துவக்கி வைத்தார்.

Update: 2022-02-02 17:38 GMT

நூலகத்தினை கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

திருச்சி மத்திய மண்டல காவல் துறை தலைவர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பெயரில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு என்.எஸ்.கே நகரில் கரூர் மாவட்ட காவல் துறை சார்பில் நூலகம் திறக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் நலன் கருதியும், மாணவர்களின் அறிவு சார்ந்த விஷயத்தில் அதிக அளவில் கவனம் எடுத்த கரூர் மாவட்ட காவல்துறை சார்பில் துவக்கப்பட்ட இந்த நூலகத்தினை கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இப்பகுதியில் உள்ள மாணவர்கள் மற்றும் மக்களின் கல்வி மற்றும் அறிவுத் திறனை மேம்படுத்தும் வகையில் இந்த நூலகம் திறக்கப்பட்டுள்ளதாகவும், மேலும், இதில் பல்வேறு தலைப்புகளில் 100க்கும் மேற்பட்ட புத்தகங்கள் அறிவு சார்ந்த புத்தகங்களும் இங்கு மாணவர்களின் படிப்பிற்காக வைக்கப்பட்டுள்ளது. சிறு வயது குற்றவாளிகளை தடுக்கும் விதமாக மாணவர்களுக்கு கல்வி, விளையாட்டு போன்றவற்றை வெங்கமேடு காவல் நிலையம் சார்பில் கற்பிக்கப்படுவதாக போலிசார் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் கரூர் நகர துணை கண்காணிப்பாளர் தேவராஜ், வெங்கமேடு காவல் ஆய்வாளர் நெப்போலியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News