அதிமுகவினர் மீது பொய் வழக்கு: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் புகார்

உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபடும் அதிமுகவினர் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்வதாக முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு.

Update: 2021-10-04 14:45 GMT

மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கும் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்

கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேலை சந்தித்து புகார் ஒன்றை அளித்தார். அதில் தேர்தல் பணியில் ஈடுபடும் அதிமுகவினர் மீது திமுக தூண்டுதலால் பொய் வழக்கு போடப்படுகிறது என குற்றம் சாட்டினார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறியதாவது:

உள்ளாட்சி தேர்தல் நேற்று இரவு தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட திமுக, அதிமுகவினரிடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதையடுத்து ஆளுங்கட்சி தூண்டுதலால் அதிமுகவினர் 4 பேர் மீது கொலை வழக்கு பதிந்துள்ளனர். பிணையில் வர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிந்து 2 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து அதிமுகவினர் மீது பொய் வழக்கு பதிந்தால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்.

தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிமுகவினரை, திமுகவில் இணையும்படி மிரட்டி வருகின்றனர். தோல்வி பயத்தில் திமுக உள்ளது.  அரசு கட்டிடங்களில் திமுகவினர் விளம்பரம் எழுதி அராஜகம் செய்து வருகின்றனர். கரூர் சட்டமன்ற தொகுதியில் போலி கொலுசு கொடுத்து ஏமாற்றியது போல தற்போது உள்ளாட்சி தேர்தலில் கொலுசு கொடுத்து ஏமாற்ற நினைக்கின்றனர் என குற்றச்சாட்டினார்.

Tags:    

Similar News