கரூர் மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளில் 47 வார்டுகளுக்கு நாளை தேர்தல்

கரூர் மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளில் ஒரு வார்டு அன்னபோஸ்ட்டில் ஜெயித்த நிலையில் மீதமுள்ள 47 வார்டுகளுக்கு நாளை தேர்தல் நடைபெற உள்ளது.

Update: 2022-02-18 14:30 GMT

பைல் படம்.

கரூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில், நாளை முதன்முதலாக தேர்தலை சந்திக்கின்றது இதில், 48 வார்டு  உறுப்பினர்களில் 24 பெண் வார்டு உறுப்பினர்களும், 24 ஆண் வார்டு உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட உள்ள நிலையில், 22 வது வார்டு திமுக வேட்பாளர் பிரேமா அன்னபோஸ்ட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார். எதிர்த்து நின்ற அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பிற வேட்பாளர்கள் அனைவரும் வாபஸ் பெற்றனர்.

இந்நிலையில் மீதமுள்ள 47 வார்டிற்கும் நாளை காலை முதல் மாலை வரை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மையம் ஆகிய கட்சிகளுடன் சுயேட்சை வேட்பாளர்கள் என்று 47 வார்டுகளுக்கும் சேர்த்து 266 நபர்கள் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், கடந்த முறை ஊரக உள்ளாட்சி தேர்தலிலும், சட்டசபை தேர்தலிலும் அதிமுக கட்சியுடன் கூட்டணியில் போட்டியிட்ட பாரதீய ஜனதா கட்சி இந்த முறை தனியாக அதிமுக மற்றும் திமுக கட்சிகளை எதிர்த்து நின்று போட்டியிடுகின்றது. எந்த வார்டுகளிலும் இரண்டு வேட்பாளர்கள் இல்லாத நிலையில், குறைந்த பட்ச வேட்பாளர்கள் 3 நபர்களும் அதிக பட்சம் வேட்பாளர்கள் 10 என்கின்ற கணக்கில் ஒவ்வொரு வார்டிலும் போட்டியிட்டு களத்தில் உள்ள நிலையில், நாளை காலை முதல் மாலை வரை வாக்கு பதிவு நடைபெற உள்ளது.

Tags:    

Similar News