கரூர் மாவட்டத்தில் 21 மாணவர்களுக்கு ஆட்சியர் தங்கவேலு வழங்கிய கல்வி கடன்

கரூர் மாவட்டத்தில் 21 மாணவர்களுக்கு ஆட்சியர் தங்கவேலு கல்வி கடனிற்கான ஆணைகளை வழங்கினார்.

Update: 2024-02-19 16:43 GMT

மாணவர்களுக்கு கல்வி கடனிற்கான காசோலைகளை கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேலு வழங்கினார்.

வங்கிகள் வழங்கும் கல்வி கடன் உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இதன் காரணமாக மாணவர்கள் வங்கிகளை நாடுகிறார்கள். ஆனால் அதற்கான வழிமுறைகள் தெரியாமல் சிலர் தவிக்கிறார்கள். இந்த பிரச்சினை அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக உள்ளது.

இந்நிலையில் கரூர் மாவட்ட நிர்வாகம் மாவட்ட முன்னோடி வங்கி அனைத்து தேசியமயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகளும் இணைந்து நடத்திய மாபெரும் கல்வி கடன் முகாமினை கலெக்டர் தங்கவேல் துவக்கி வைத்து 21 நபர்களுக்கு ரூ. 1.13 கோடி மதிப்பிலான கல்வி கடன்களை வழங்கினார். நிகழ்ச்சிக்கு கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் முன்னிலை வகித்தார்.

கரூரில் அரசு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:-

வித்யாலட்சுமி போர்டல் என்ற ஒரு இணையதளத்தை உருவாக்கி அதன் மூலம் மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே தங்களது கல்லூரி விபரம் முகவரி ஆதார் எண் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பதிவேற்றம் செய்து வங்கியாளர்களின் பரிசீலனைக்கு விண்ணப்பம் அனுப்பலாம். பிறகு ஆன்லைன் மூலமாகவே வங்கி கடன்களை பெறக்கூடிய ஒரு சிறப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

நமது கரூர் மாவட்டத்தில் இதுவரை 1047 மாணவர்களுக்கு ரூ.21.11 கோடி கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது. அதற்காக மாவட்ட முன்னோடி வங்கி அலுவலர்கள் மற்றும் அனைத்து வங்கிகளுக்கும் இந்த கல்வி கடன் பெற்றவர்கள் சார்பாக எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.அனைத்து வங்கிகளும் அனைத்து கல்லூரிகளுக்கும் நேரில் சென்று விண்ணப்பங்களை பெற்று கல்வி கடன்களை வழங்கி வருகிறது. 

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் பேசினார்.

Tags:    

Similar News