கரூரில் பட்டா மாறுதல், பிழை திருத்த சிறப்பு முகாம்: ஆட்சியர் பங்கேற்பு

கரூரில் வீட்டு உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் பட்டா தொடர்பான பிரச்னைகளை தீர்க்க சிறப்பு முகாம் நடைபெற்றது.

Update: 2021-10-27 07:30 GMT

பட்டா மாறுதல்,  திருத்தம் தொடர்பான சிறப்பு முகாமில் ஆட்சியர் பிரபு சங்கர் சான்றிதழை வழங்கினார்.

தமிழகம் முழுவதும் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்கள் பட்டா மாறுதல், பிழை திருத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை தீர்ப்பதற்காக ஒவ்வொரு ஊராட்சியிலும் சிறப்பு முகாம்களை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனடிப்படையில், கரூர் மாவட்டம் காதப்பாறை ஊராட்சியில் இன்று முதல் சிறப்பு முகாம் நடைபெற்றது.

காதப்பாறை ஊராட்சியில் வசிக்கும் பொதுமக்கள், விவசாயிகள் தங்களது பட்டா தொடர்பான பிரச்சனைகள் குறித்து மனு அளித்து உடனடியாக பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. முகாமில், மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தலைமையில் நடைபெற்ற சிறப்பு முகாமில் 51 பேர் தங்களது பட்டாவில் உள்ள பெயர் மாற்றம், பிழை திருத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை தீர்க்க கோரி மனு அளித்தனர்.

இவர்களில், 21 பேரின் பட்டா தொடர்பான பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் சம்பந்தப்பட்டவர்களுக்கு நேரிடையாக வழங்கினார்.

Tags:    

Similar News