கூட்டணி தர்மத்தை திமுக மதிக்கவில்லை: விடுதலை சிறுத்தைகள் கட்சி குற்றச்சாட்டு

கரூர் மாநகராட்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சீட் ஒதுக்கிவிட்டு திமுக வேட்பாளர் போட்டியிட்டதால் பரபரப்பு.

Update: 2022-02-08 01:21 GMT

கரூர் மாநகராட்சியில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சீட் ஒதுக்கிவிட்டு திமுக வேட்பாளர் போட்டியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர் மாநகராட்சியில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சீட் ஒதுக்கிவிட்டு திமுக வேட்பாளர் போட்டியிட்டதால் மாநகராட்சியில் பரபரப்பு.

தமிழக அளவில் வரும் 19-ஆம் தேதி நகரமைப்பு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி பல்வேறு இடங்களில் தனித்துப் போட்டியிடும் நிலையில், மதிமுக உள்ளிட்ட கட்சிகளும் ஆங்காங்கு தனித்துப் போட்டியிட்டு வருகின்றது. என்ன நிலையில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு கரூர் மாநகராட்சியில் 11 வார்டு திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு என்று ஒதுக்கிவிட்டு அதன் வேட்பாளராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜெயராம் என்பவர் அறிவிக்கப்பட்டு இருந்தார்.

இந்நிலையில் திமுக வேட்பாளர் பழனி குமார் என்பவரும் போட்டியிடும் நிலையில் கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளரும், தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு துரோகம் செய்துவிட்டதாகவும், கூட்டணி தர்மத்தை மீறி அமைச்சர் செந்தில் பாலாஜி செயல்படுவதாக கூறி கரூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு, திடீரென்று ஒன்றுகூடி கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் கூட்டணி தர்மத்தை மதிக்காமல் அமைச்சர் செந்தில்பாலாஜி தன்னிச்சையாக செயல்படுவதாக கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சி தக்க பதிலடி கொடுக்கும் என்று கூறி மாநகராட்சி அலுவலகத்தை விட்டு வெளியேறினர்.

Tags:    

Similar News