கரூர் காதிகிராப்டில் தீபாவளி விற்பனை தொடக்கம்

தீபாவளியையொட்டி கரூர் காதிகிராப்ட்டில் சிறப்பு தள்ளுபடியுடன் கூடிய விற்பனை இன்று தொடங்கியது.

Update: 2021-10-02 16:45 GMT

காதிகிராப்ட் தீபாவளி சிறப்பு விற்பனையை தொடங்கி வைக்கிறார் மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத்.

கரூர் தான்தோன்றிமலையில் உள்ள காதிகிராப்ட் விற்பனை அங்காடியில்,  தீபவளி சிறப்பு விற்பனையை இன்று  மாவட்ட வரூவாய் அலுவலர்  லியாகத் தொடங்கி வைத்தார். கிராமப்புறங்களில் உள்ள ஏழை, எளிய நூற்பாளர்கள் மற்றும் நெசவாளர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் அவர்களது தயாரிப்பை காதிகிராப்ட் நிறுவனம் சந்தைப்படுத்தி வருகிறது.   கிராமப்புறங்களில் உள்ள கதர் நெசவாளர்ளால் நவீன நாகரிகத்திற்கு ஏற்றவாறு புத்தம் புதிய வடிவமைப்புகளில் நெசவு செய்யப்படும் கதராடைகள் தற்போது கதர் அங்காடிகள்  விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

கரூர் மாவட்டத்தில் தீபாவளி சிறப்பு விற்பனையைத் தொடங்கி வைத்த மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத் கூறுகையில்,   கரூர் மாவட்டத்தைப் பொருத்தவரை கடந்த ஆண்டு ரூ. 79   லட்சம் மதிப்பிலான கதர் ரகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. நிகழாண்டு ரூ. 148 லட்சத்துக்கு தீபாவளி சிறப்பு விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.

தீபாவளி சிறப்பு விற்பனையில்,   கதர், பாலியஸ்டர்  மற்றும் பட்டு ரகங்களுக்கு 30 சதவீதமும் சில பட்டு ரகங்களுக்கு 50 சதவீதமும் சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. தற்போது பொது மக்கள் வசதிக்காக அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் தற்காலிக கதர் அங்காடிகள் துவக்கப்பட்டுள்ளது.

மேலும்,  தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் அலகுகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் தேன், குளியல் சோப்புகள் மற்றும் சலவை சோப்புகள், பத்தி, சாம்பிராணி, மெழுகுவார்த்தி, ஜவ்வாது, வலி நிவாரணி தைலம் மற்றும் ஷாம்பு உள்ளிட்ட பல்வகையான கிராமப் பொருட்கள் கதரங்காடியில் விற்பனை செய்யப்படுகிறது.  மேலும் காதி கிராப்ட் பொருட்களை ஆன்லைன் மூலமும் வாங்கலாம்.  அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு சுலப தவணை வசதியும் உள்ளது.  சிறப்பு விற்பனை நிகழ்ச்சியில்,  கதர் கிராம தொழில் வாரிய  உதவி இயக்குநர்  பாலகுமாரன், கதர் ஆய்வாளர் .பொன்ராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

Tags:    

Similar News