'இதோ பிடிங்க முககவசம்; அதோ குடிங்க கப சுர பானம்'

கரூர் பஸ் ஸ்டாண்டில் பொது மக்களுக்கு கப சுர பானம் மற்றும் மாஸ்க் வழங்கப்பட்டது.

Update: 2021-04-19 10:34 GMT

கரூர் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் பொதுமக்களுக்கு கப சுர பானம் வழங்கினார்.

கரூர் பேருந்து நிலையம் அருகில் எலக்ட்ரீசியன் மற்றும் பிளம்பர் நல சங்கம் சார்பில் கரூர் மாவட்ட நகர காவல் நிலைய ஆய்வாளர்  பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், மாஸ்க் ஆகியவற்றை வழங்கினார்.

    நாடு முழுவதும் கொரோனா வைரஸ் நோய் தொற்று இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது . இதன் காரணமாக மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. தமிழக அரசு சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கரூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் பரவலை தடுக்கும் விதமாக இன்று கரூர் மாவட்ட எலக்ட்ரீசியன் மற்றும் பிளம்பர் நல சங்க உறுப்பினர்கள்  சார்பில் கரூர் மாவட்ட நகர காவல் ஆய்வாளர் சிவசுப்பிரமணியம், பேருந்து நிலையப் பகுதியில்,   பொதுமக்களின் வாகனங்களை நிறுத்தியும், நடந்து செல்லும் பொதுமக்களுக்கு  நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டும்  கபசுர குடிநீர், முகக்கவசம், சானிடைசர் ஆகியவற்றை வழங்கினார். 

   முகக்கவசம் அணியாதவர்களுக்கு முக கவசம் அணிவதில் அவசியத்தை உணர்த்தி, முகக்கவசம் வழங்கினார். இந்நிகழ்வின் போது கரூர் மாவட்ட மின்சார வாரிய செயற்பொறியாளர், எலக்ட்ரீசியன் மற்றும் பிளம்பர் சங்க நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர். 

Tags:    

Similar News