கரூரில் கொரோனா நிவாரண நிதி ரூ. 2 ஆயிரம் வழங்கும் திட்டம் தொடக்கம்

கரூர் மாவட்டத்தில் கொரோனா நிவாரண நிதியாக ரூ. 2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை. அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்.

Update: 2021-05-15 05:00 GMT

 கரூரில் இன்று கொரோனா நிவாரண நிதியாக முதல் கட்டமாக ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். முதல் கட்டமாக இந்த மாதமே ரூ.2000 வழங்க உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து இன்று கரூர் அருகில் உள்ள கோடாங்கிபட்டி கிராமத்தில் கொரோனா நிவாரண நிதியாக முதல் கட்டமாக ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை மின்சாரம், மதுவிலக்கு, மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.

 அப்போது அவர் பேசுகையில், பொதுமக்கள் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்திட கட்டாயம் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் அரசிடம் முறையாக பதிவு செய்து வெளியில் வரவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்காக ஆக்சிஜன் வசதியுடன் கூடி படுக்கை வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

 மாவட்டம் முழுவதும், கூட்டுறவுத் துறையின் கீழ் உள்ள 590,  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கீழ் செயல்படும் 2 என மொத்தம் 592 நியாய விலைக் கடைகள் மூலம். 3,11,511 குடும்பங்களுக்கு முதல் கட்ட நிவாரண நிதியாக ரூ 2 ஆயிரம் வீதம் 62 கோடியே 30 லட்சம் வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News