பாலுக்கு பதில் பீர்! அஜித் ரசிகர்களின் வைரலாகும் அபிஷேக வீடியோ!

கரூர் கலையரங்கம் தியேட்டரில் நடிகர் அஜித் பேனருக்கு ரசிகர் ஒருவர் பீர் அபிஷேகம் செய்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Update: 2022-02-24 16:15 GMT

பீரில் அபிஷேகம் செய்யம் ரசிகர்கள்.

நடிகர் அஜித்குமார் நடிப்பில் வலிமை திரைப்படம் இன்று கரூர் மாநகரில் உள்ள பல்வேறு திரையரங்குகளில் ரிலீசானது. இந்நிலையில் தமிழக அளவில் ஆங்காங்கே அஜித் ரசிகர்கள் வித்தியாசமான முறையில் வலிமை திரைப்படம் வெளியானதை கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, கரூர் கலையரங்கம் திரையரங்கில் வைக்கப்பட்டிருந்த வலிமை திரைப்படம் போஸ்டரில் இருந்த நடிகர் அஜித்திற்கு ஒரு ரசிகர் பீரினால் அபிஷேகம் நடத்தி விட்டு சென்ற காட்சி தற்போது தமிழக அளவில் வைரலாகி வருகின்றது. ரசிகர் ஒருவர் திடீரென்று, இரண்டு பீர் பாட்டில்கள் கொண்டு வந்து அதை அஜித் படத்திற்கு அபிஷேகம் செய்த காட்சி தற்போது மற்ற ரசிகர்களிடமும், பொதுமக்களிடமும் முகச்சுளிப்பை ஏற்படுத்தியுள்ளது

Tags:    

Similar News