ஸ்டெர்லைட் ஆலை சதித்திட்டம் மூலம் திறக்க முயற்சி முகிலன் குற்றச்சாட்டு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆக்ஸிசன் தயாரிப்பு என்ற போர்வையில் திறக்கும் சதித் திட்டத்தை முறியடிக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் கூறினார்.

Update: 2021-04-26 06:30 GMT

 ஸ்டெர்லைட் ஆலையை தொடங்குவது தொடர்பான அனைத்து கட்சி கூட்டம் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற  நிலையில்,  கரூரில் சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில்,

வேதாந்தா குழுமத்துக்கு யூனியன் பிரதேசமான டாமன் டையூவில் காப்பர் தயாரிக்கும் ஆலை உள்ளது. அங்கு ஆக்ஸிசன் தயாரிக்கப்படுகிறதா என தமிழக அரசு கேள்வி எழுப்ப வேண்டும்.          வேதாந்த குழுமத்துக்கு அலுமினியம், இரும்பு, , பெட்ரோலியம், ரசாயனம் தயாரிக்கும் ஆலைகள் இந்தியா முழுவதும் உள்ளன. இவற்றில் ஆக்ஸிசன் தயாரித்து மக்களுக்கு தருவதாக கூறியுள்ளனரா என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் கேள்வி எழுப்ப வேண்டும்.

ஆக்ஸிசன் தயாரிப்பு என்ற போர்வையில் ஸ்டெல்லைட் ஆலையை தொடங்க உள்ள சதித்திட்டத்தை முறியடிக்க வேண்டும்.  ஸ்டெர்லைட் ஆலையை ஆயிரம் மெட்ரிக் டன் ஆக்ஸிசனை உற்பத்தி செய்து எந்தெந்த நிறுவனங்களுக்கு அனுப்பி வந்தது என்பதற்கான ஆதாரங்கள் இல்லை.     

மேலும் ஸ்டெர்லைட் ஆலையில், ஆக்ஸிசன் தயாரிக்கும் இரண்டு ஆலைகள் இருப்பது உண்மைதான் ஆனால் அது இயங்குவதற்கான எந்தவித முறையான அனுமதி எதுவும் பெறவில்லை இது சட்டவிரோதம்.

இந்தியா முழுவதும் உள்ள. செயில் நிறுவன ஆலைகள் 650 டன் ஆக்ஸிசன் தயாரித்து அளித்து வருகிறது. இந்த ஆலைகள் 30 ஆயிரம் டன் ஆக்ஸிசன் உற்பத்தி செய்து தர உள்ள நிலையில் அதை பெற்றுத் தராமல் மத்திய அரசு வேதாந்தா நிறுவனத்தை தொடங்க முயல்வதின் உள்நோக்கம் என்ன என முகிலன் கேள்வி எழுப்பினார்.   

 தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலை திறக்க தடை விதித்து கொள்கை முடிவு ஏன் எடுக்கவில்லை. நீட், ஜல்லிக்கட்டுக்கு கொள்கை முடிவு எடுத்த தமிழக அரசு தூத்துக்குடி மக்களுக்காக ஏன் கொள்கை முடிவு எடுக்கவில்லை.

இந்த சூழ்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டால் அதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் எனவும் முகிலன் பேட்டியளித்தார்.

Tags:    

Similar News