வெண்ணைமலையில் தூய்மை பணி 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

Update: 2021-10-28 11:15 GMT

வெண்ணமலையில் தூய்மை பணியில் ஈடுபட்ட மாணவர்கள்.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பில் வெண்ணைமலை பகுதியில் இந்த தூய்மை பணி நடைபெற்றது. காதப்பாறை ஊராட்சிக்குட்பட்ட வெண்ணைமலை பாலசுப்ரமணிய சுவாமி கோவில் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்றது.

இதில், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 8 உறுப்பு கல்லூரிகளை சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணி திட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு கோவில் சுற்றுப்புறத்தில் உள்ள மக்கும் குப்பை, மக்காத குப்பை உள்ளிட்டவற்றை தனித்தனியாக பிரித்து அதற்கான பைகளில் சேகரித்து அவற்றை ஊராட்சி தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைத்தனர்.

இந்த தூய்மை பணி நிகழ்ச்சிக்கு காதப்பாறை ஊராட்சி மன்ற தலைவர் கிருபாவதி, முருகையன் தலைமை தாங்கினார். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் லட்சுமி பிரபா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

Tags:    

Similar News