ரேஷன் கடைகளில் தொடரும் பாமாயில், பருப்பு தட்டுப்பாடு ; ஆட்சியர் விளக்கம்!

மாதந்தோறும் 11,42,536 குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி சர்க்கரை உள்ளிட்ட பல பொருள்கள் வழங்கப்படுகின்றன.

Update: 2024-06-13 14:45 GMT

ஆட்சியர் கிராந்திகுமார் பாடி

கோவை மாவட்டத்தில் மொத்தம் 1536 நியாய விலை கடைகள் உள்ளன. மாதந்தோறும் 11,42,536 குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி சர்க்கரை உள்ளிட்ட பல பொருள்கள் வழங்கப்படுகின்றன. கடந்த மே மாதம் பருப்பு பாமாயிலுக்கு தட்டுப்பாடு நிலவியது. தேர்தல் விதிமுறை அமலில் உள்ளதால் டெண்டர் வெளியிடுவதில் காலதாமதம் ஏற்படுவதாக கூறப்பட்டது. மே மாதத்திற்கான பருப்பு பாமாயில் பொருள்களை இம்மாதம் முதல் வாரத்தில் பெற்றுக் கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்தது.

அதேபோல் ஜூன் மாதம் முதல் வாரத்தில் மே மாதத்திற்கான பொருட்களை ஊழியர்கள் வழங்கினார். இருப்பினும் பருப்பு பாமாயிலுக்கு தட்டுப்பாடு தொடர்வதால் கடந்த மாதம் வழங்க வேண்டிய தொகுப்பு பலருக்கு வழங்கப்படவில்லை இந்நிலையில் இந்த மாதத்துக்கான ஒதுக்கீடும் விநியோகிக்கப்படவில்லை. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

கோவை நுகர்வோர் அமைப்பினர் கூறும் போது, பொதுவாக கோவை மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு முதல் வாரமும், மூன்றாவது வாரமும் பொருள்கள் குடோனில் இருந்து அனுப்பி வைக்கப்படும். பெரும்பாலான ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் சரிவர கோவை மாவட்டத்தில் விநியோகிக்கப்படுவதில்லை, கண்காணிப்பு குழு அதிகாரிகள் சரிவர பணியாற்றுவதில்லை, மாவட்ட வளங்கள் அலுவலர் ஆய்வு செய்ய வேண்டும் அதுவும் சரிவர நடப்பதில்லை.

மாதந்தோறும் குறித்த நேரத்தில் அனைத்து பொருட்களும் சிறந்த தரத்துடன் திருப்பி விநியோகிக்கப்படுவதை உறுதிப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் காந்தி குமார் பாடி கூறும் போது, டெண்டர் பணிகளால் பருப்பு பாமாயில் விநியோகம் பாதிக்கப்பட்டு உள்ளது. தவிர பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்க பெறப்பட்ட பருப்பின் தரம் குறைவாக இருந்த காரணத்தால் திருப்பி அனுப்பப்பட்டது. விரைவில் பாமாயில், பருப்பு விநியோகம் சீராகும் எனத் தெரிவித்தார்

Tags:    

Similar News