மாஞ்சோலை விவகாரத்தில் முதல்வர் தலையிட்டு தீர்வு காண வேண்டும் : டாக்டர் கிருஷ்ணசாமி கோரிக்கை

Coimbatore News- மாஞ்சோலை விவகாரத்தில் முதல்வர் நேரடியாக தலையிட்டு தொழிலாளர் வாழ்வை காப்பாற்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என டாக்டர் கிருஷ்ணசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2024-06-14 11:15 GMT

Coimbatore News- கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி

Coimbatore News, Coimbatore News Today- கோவை குனியமுத்தூரில் உள்ள இல்லத்தில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர் சந்திப்பு நடைப்பெற்றது.

அப்போது பேசிய அவர், தமிழகத்தில் நீலகிரி, நெல்லை, திண்டுக்கல் உட்பட 5 மாவட்டங்களில் தேயிலை தோட்டங்கள், காபி தோட்டங்கள் உருவாக்கப்பட்டு 10 லட்சம் தொழிலாளர்கள் வேலையில் இருக்கின்றனர். நெல்லை களக்காடு முண்டந்துறை வனப்பகுதியில் மாஞ்சோலை தேயிலை தோட்டங்கள் ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கபட்டவை. இவை 99 வருட குத்தகைக்காக பிபிடிசி என்ற நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டது. மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை விருப்ப ஓய்வு என்ற பெயரில் கட்டாயமாக கையெழெத்து வாங்கி வீட்டிற்கு அனுப்ப நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இன்றுடன் வேலையை நிறுத்தி விட்டனர். 45 நாட்களுக்குள் இருப்பிடத்தை காலி செய்ய வலியுறுத்துகின்றனர்.

8700 ஏக்கர் நிலம் வனத்துறைக்கு சொந்தமான நிலம். இந்த நிர்வாகத்திற்கான ஒப்பந்தம் முடிவடைகின்றதே தவிர, இதை காரணம் காட்டி வெளியேற்றுவது என்பது சரியல்ல. 20 முதல் 30 வருடம் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு ஒரு லட்சம் தருவதாக கூறி விட்டு இப்போது 25 சதவீதம் மட்டுமே முதலில் கொடுப்பதாக சொல்லி மோசடி செய்து இருக்கின்றனர். தமிழகத்தை சார்ந்த இலங்கை மலையகத்தமிழர்கள் திரும்பி வந்த போது, அவர்களுக்கு வேலை வாய்ப்பிற்காக தேயிலை தோட்டங்கள் ஏற்படுத்தபட்டது. நான்கைந்து தலைமுறையாக இருப்பவர்களை வெளியேற சொல்வது என்பது சரியல்ல. முதல்வர் இந்த பிரச்சினையில் முதல்வர் நேரடியாக தலையிட்டு தொழிலாளர் வாழ்வை காப்பாற்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.முதல்வர் நேரடியாக தலையிட்டு தொழிலாளர் வாழ்வை காப்பாற்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். குத்தகை முடிந்தால் அதை டேன்டீ நிர்வாகம் எடுத்து நடத்த வேண்டும்.

சட்டமன்றத்தில் இது குறித்து கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வை கொடுக்க வேண்டும். இது தொடர்பாக எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் கொடுத்துள்ளேன். இதில் அரசியல் பாராது அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டும். மாஞ்சோலை தேயிலை தோட்டங்கள் 8700 அந்த நிலத்தை ஹெச்டிஎப்சி வங்கியில் அடகு வைத்து கடன் வாங்கி இருக்கின்றனர். அதில் பல அத்துமீறல்கள் நடந்து இருக்கின்றது. வேறு ஏதோ தவறான செயலில் ஈடுபட சதி இருப்பதாகவே கருதுகின்றேன். 2015 ல் கடன் வாங்கி இருக்கின்றனர். அரசு இவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். தாசில்தார் எப்படி சர்டிபிகேட் கொடுத்தார்? அரசின் நிலத்தை எப்படி அடகு வைத்தனர். சட்டசிக்கலை ஏற்படுத்தி தொழிலாளர்களை வெளியேற்ற பார்க்கின்றனர்.தமிழக அரசு மீண்டும் தேயிலை தோட்டங்களை அழிப்பற்கு அனுமதிக்க கூடாது” எனத் தெரிவித்தார்.

Tags:    

Similar News