பொள்ளாச்சி மாட்டு சந்தையில் ரூ.3 கோடிக்கு விற்பனையான மாடுகள்

கேரள வியாபாரிகள் அதிகளவில் மாடு மற்றும் எருமைகளை வாங்கி சென்றனர்.

Update: 2024-06-13 10:08 GMT

பொள்ளாச்சி மாட்டு சந்தை (கோப்பு படம்).

தென்னிந்தியாவில் மிகப்பெரிய கால்நடை சந்தையாக கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் உள்ள மாட்டு சந்தை உள்ளது. வாரத்தில் செவ்வாய் மற்றும் வியாழன் என 2 நாட்கள் இந்த மாட்டு சந்தை நடைபெறுகிறது. செவ்வாய்க்கிழமைகளில் மாடுகள் விற்பனையும், வியாழக்கிழமைகளில் ஆடு, மாடு விற்பனையும் சேர்ந்து நடைபெறுகிறது. இந்த சந்தைக்கு பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் மட்டுமின்றி தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் மாடுகள் விற்பனைக்கு வருவது வழக்கம். மேலும் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் மாடுகள் விற்பனைக்கு வருகின்றன.

கடந்த சில மாதங்களாக சந்தை நாட்களில் இரண்டு கோடி ருபாய் அளவிற்கே வர்த்தகம் நடைபெற்று வந்தது. தற்போது வருகிற 17 தேதி பக்ரீத் பண்டிகை வருவதையொட்டி பொள்ளாச்சி மாட்டு சந்தை களை கட்டி இருந்தது. வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து 10 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மாடு மற்றும் எருமைகள் கொண்டு வரப்பட்டிருந்தது. அதனை வாங்குவதற்காக கேரளா உள்பட பல்வேறு பகுதிகளில் 350க்கும் மேற்பட்ட வியாபாரிகளும் வந்திருந்தனர்.

இதனால் காலை முதலே சந்தை களை கட்டி இருந்தது. இதனால் கேரள வியாபாரிகள் அதிகளவில் மாடு மற்றும் எருமைகளை வாங்கி சென்றனர். மேலும் மாடுகள் வாங்க வந்தவர்களின் கூட்டமும் அதிகரித்து காணப்பட்டதுகேரள வியாபாரிகள் அதிகளவில் மாடு மற்றும் எருமைகளை வாங்கி சென்றனர். மேலும் மாடுகள் வாங்க வந்தவர்களின் கூட்டமும் அதிகரித்து காணப்பட்டது. இன்று நடைபெற்ற மாட்டு சந்தையில் மூன்று கோடி வர்த்தகம் நடைபெறும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.  ஆண்டுதோறும் அதிகளவில் மாடுகள் விற்பனை நடைபெறும் சந்தையாக பொள்ளாச்சி மாட்டு சந்தை உள்ளது.

Tags:    

Similar News