செஸ் ஒலிம்பியாட் :கோவை மாநகரில் செஸ் போர்டு நிறத்தில் மாறிய பேருந்து நிறுத்தம்

செஸ் ஒலிம்பியாட் போட்டி நடப்பதையொட்டி கோவை மாநகரப்பகுதிகளில் செஸ்போர்டு நிறத்துக்கு பேருந்து நிறுத்தங்கள் மாறின

Update: 2022-07-20 16:00 GMT

கோவை மாநகரில் செஸ் ஒலிம்பியாட்  போட்டி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்  செஸ் போர்டு நிறத்தில் மாற்றப்பட்டுள்ள மாநகர பேருந்து நிறுத்தம் முன்னே  செல்பி எடுத்து கொண்ட மாணவி

செஸ் ஒலிம்பியாட் போட்டியை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில்  கோவை மாநகர பகுதிகளில் செஸ் போர்டு  வண்ணத்தில்  பேருந்து நிறுத்தங்கள் மாற்றப்பட்டன.

44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டி மாமல்லபுரத்தில் வரும் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி தமிழக அரசு பல்வேறு விதமான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட நிர்வாகம் மாநகராட்சி நிர்வாகம் சார்பிலும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கோவை மாநகரில் 10க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களில் செஸ் போர்டை போன்று மின் விளக்குகளால் வண்ண மயமாக்கப்பட்டுள்ளன.

இரவு நேரங்களில் இந்த பேருந்து நிறத்தங்கள் பொதுமக்களை கவரும் விதமாக அமைந்துள்ளதால் அங்கு வரும் பொதுமக்கள் இதனை பார்த்து புகைப்படங்கள் செல்பி எடுத்து கொள்கின்றனர்.முதல்கட்டமாக லட்சுமி மில்ஸ் பகுதியில் ஒரு பேருந்து நிறுத்தம் வண்ணமயமாக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்தடுத்து பேருந்து நிறுத்தங்கள் வண்ணமயமாக்கப்படும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


Tags:    

Similar News