இராஜபாளையம் நகராட்சி தேர்தல்: விருப்பமனு அளித்தவர்களிடம் அமைச்சர் நேர்காணல்

இராஜபாளையம் நகராட்சி தேர்தல்: விருப்பமனு அளித்தவர்களிடம் அமைச்சர் நேர்காணல்
X

ராஜபாளையம் நகராட்சியில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் வருவாய்த்துறை அமைச்சர் கேகே.எஸ்எஸ்.ஆர் ராமச்சந்திரன் தலைமையில் நேர்காணல் நடைபெற்றது.

இராஜபாளையம் நகராட்சி 42 வார்டுகளில் கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட 107 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர்.

இராஜபாளையம் நகராட்சித்தேர்தலில் வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தவர்களிடம் அமைச்சர் நடத்திய நேர்காணலில் 67 பேர் பங்கேற்றனர்.

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் நகராட்சிக்கு உள்பட்ட 42 வார்டுகளில் கவுன்சிலர் பதவிக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், திமுக சார்பில் 107 பேர் விருப்ப மனு தாக்கல் செய்திருந்தவர்களிடம், வருவாய்த்துறை அமைச்சர் கேகே.எஸ்எஸ்.ஆர். ராமச்சந்திரன் தலைமையில் நேர்காணல் நடைபெற்றது. இதில், இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன், தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம். குமார் ,மாவட்ட துணைச் செயலாளர் ராசஅருண்மொழி, நகரச் செயலாளர் ராமமூர்த்தி மணிகண்ட ராஜா மற்றும் முக்கிய கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர் .

இந்த நேர்காணலில் விருப்ப மனு கொடுத்த 107 பேரில் 67 பேர் கலந்து கொண்டனர் . தங்கள் வார்டுகளில் எந்த மாதிரியான பணிகள் செய்வீர்கள் மக்கள் பிரச்சனைகள் எந்த அளவுக்கு அறிந்துள்ளீர்கள் என்பது குறித்து நேர்காணலில் அமைச்சர் கே.கே.எஸ் எஸ்.ஆர் ராமசந்திரன் கலந்துரையாடினார். தங்களுக்கு வாய்ப்பளித்தால் தலைமைக்கு கட்டுப்பட்டு சிறப்பாக செயல்படும் என இதில், கலந்து கொண்டவர்கள் வாக்குறுதி அளித்தனர்.

Tags

Next Story
ai automation in agriculture