/* */

திருவண்ணாமலை நகராட்சியில் மறுவாக்குபதிவு அமைதியான முறையில் துவங்கியது

திருவண்ணாமலை நகராட்சி 25வது வார்டுக்கான மறுவாக்குபதிவு அமைதியான முறையில் துவங்கியது.

HIGHLIGHTS

திருவண்ணாமலை நகராட்சியில் மறுவாக்குபதிவு அமைதியான முறையில் துவங்கியது
X

வாக்களிப்பதற்காக ஆர்வமுடன் நீண்ட வரிசையில் காத்திருக்கும் பெண்கள்

திருவண்ணாமலை நகராட்சி 25-வது வார்டில் உள்ள வாக்குச்சாவடி எண் 57 ல் வாக்குப்பதிவு நாளில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்த நிலையில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா அறிகுறி உள்ளவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்கலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது

இன்று காலை முதலே அனைத்து கட்சியை சேர்ந்தவர்களும் அப்பகுதியில் கூடியுள்ளனர்.


ஏராளமான போலீசார் துணை மாவட்ட கண்காணிப்பாளர் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வாக்குச்சாவடி அமைந்துள்ள சண்முகா அரசு மேல்நிலைப்பள்ளி, செங்கம் சாலை பகுதியில் வரும் வாகனங்கள் அனைத்தும் வேறு வழியாக திருப்பி அனுப்பப்பட்டு வருகிறது.

அனைத்து கட்சி பொறுப்பாளர்களும் நிர்வாகிகளும் உறுப்பினர்களும் என அப்பகுதி முழுவதும் குவிந்துள்ளதால் ஒரு திருவிழாவைப் போல காட்சி அளிக்கிறது.

போலீசார் வாக்குப்பதிவு நடைபெறும் இடத்தில் இருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் தடுப்புகளை அமைத்து வாக்களிக்க வரும் வாக்காளர்களின் அடையாள அட்டையை சரிபார்த்த பின்பே அப்பகுதிக்குள் அனுமதிக்கின்றனர்.

அதேபோல் வேட்பாளர் மற்றும் அவர்களின் முகவர் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வாக்குச் சாவடியை சுற்றி அனைத்து இடங்களிலும் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பதற்றமான சூழ்நிலையில் தண்ணீர் பாய்ச்சி கூட்டத்தை கலைக்கும் வாகனமும் நிறுத்தப்பட்டுள்ளது.

Updated On: 21 Feb 2022 5:27 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு