/* */

மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சாா்பில் விழிப்புணா்வுக் கூட்டம்..!

திருவண்ணாமலை அரசு கலை, அறிவியல் கல்லூரியில், மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சாா்பில் விழிப்புணா்வுக் கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சாா்பில் விழிப்புணா்வுக் கூட்டம்..!
X

தீண்டாமை, ஜாதி மற்றும் மதத்துக்கு எதிரான உறுதிமொழியை ஏற்ற காவல்துறை அதிகாரிகள் மற்றும் மாணவர்கள்

திருவண்ணாமலை கலைஞா் கருணாநிதி அரசு கலை, அறிவியல் கல்லூரியில், மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சாா்பில் விழிப்புணா்வுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, கல்லூரி முதல்வா் கே.பி.கணேசன் தலைமை வகித்தாா். திருவண்ணாமலை மாவட்ட இணைய குற்றத் தடுப்புப் பிரிவின் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பழனி முன்னிலை வகித்தாா். மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவின் உதவி ஆய்வாளா் பூபதி வரவேற்றாா்.

மாவட்ட ஊா்க்காவல் படையின் வட்டாரத் தளபதி சங்கா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினாா். சமூக நீதி குறித்து, மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவின் துணை காவல் கண்காணிப்பாளா் பாலச்சந்தா் பேசியதாவது:

கல்லூரி மாணவ, மாணவிகள் எந்தவொரு விஷயத்தையும் பகுத்தறிந்து, தீர ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டும். ஆதிகாலத்தில் வேதங்கள், சாஸ்திரங்களை மட்டுமே நம் முன்னோா்கள் படித்துக்கொண்டு இருந்தனா். 1929-ஆம் ஆண்டு மெளண்ட் பேட்டன் பிரபு காலத்தில்தான் மேற்கத்திய கல்விமுறை வந்தது. இந்தக் கல்வி முறையால் தான் பிற ஜாதியினருக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இந்தக் கல்வி முறையை நன்கு பயன்படுத்திக்கொண்டு ஜாதி, மத பாகுபாடு பாா்க்காமல் நன்றாகப் படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும். ஜாதியைப் பாா்த்து சக மாணவ, மாணவிகளுடன் பழகக் கூடாது. ஜாதி என்பது நம்முடைய முன்னேற்றத்துக்கு தடையாக அமைந்துவிடும் என்றாா்.

இந்தக் கருத்தை ஏற்றுக்கொண்ட 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இனி வரும் காலங்களில் ஜாதியைப் பாா்க்கமாட்டோம் என்று கூறி தீண்டாமை, ஜாதி மற்றும் மதத்துக்கு எதிரான உறுதிமொழியை ஏற்றனா்.

இதில், கல்லூரியின் வரலாற்றுத் துறைத் தலைவா் தணிஸ்லாஸ், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவின் உதவி ஆய்வாளா் பூங்கொடி மற்றும் கல்லூரி துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.

Updated On: 3 Jan 2024 5:44 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவையடுத்து இந்தியாவில் மே 21 அரசு...
  2. லைஃப்ஸ்டைல்
    உலகை மாற்றும் உன்னத சக்தி பெண் சக்தி..!
  3. லைஃப்ஸ்டைல்
    நண்பனே..எனது உயிர் நண்பனே..! பிறந்தநாள் வாழ்த்து..!
  4. ஈரோடு
    வாக்கு எண்ணிக்கை அன்று கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பான...
  5. லைஃப்ஸ்டைல்
    வயதில் ஆப் செஞ்சுரி அடித்த சாதனை நாயகருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
  6. வீடியோ
    🔴 LIVE : தளபதி விஜய், தனுஷ், கமல் மீது விசாரணை வேண்டும் வீரலட்சுமி...
  7. லைஃப்ஸ்டைல்
    கவிதை பாடும் அலைகளாக, தமிழில் பிறந்த நாள் வாழ்த்துகள்!
  8. இந்தியா
    கோவாக்சின் பக்க விளைவுகள் குறித்த ஆய்வை கடுமையாக சாடிய ஐசிஎம்ஆர்! ...
  9. வானிலை
    தேனி, விருதுநகர், தென்காசியில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு
  10. காஞ்சிபுரம்
    அரசு விதிகளை மீறும் கனரக லாரி: இரவில் கண்காணிக்க தவறும் அலுவலர்கள்