/* */

ஆசிரியர்களுக்கான நவீன தொழில்நுட்பத்தில் பாடத்திட்டம் பயிற்சி வகுப்பு

திருவண்ணாமலையில் ஆசிரியர்களுக்கான நவீன தொழில்நுட்பத்தில் பாடத்திட்டத்தினை வழங்குதல் தொடர்பான பயிற்சி வகுப்பு நடைபெற்றது

HIGHLIGHTS

ஆசிரியர்களுக்கான நவீன தொழில்நுட்பத்தில் பாடத்திட்டம் பயிற்சி வகுப்பு
X

அருணை  பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கு

திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியில் பள்ளி ஆசிரியர்களுக்கான நவீன தொழில்நுட்பத்துடன் இணைந்து பாடத் திட்டத்தினை வழங்குதல் தொடர்பான பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு அருணை பொறியியல் கல்லூரியின் பதிவாளர் முனைவர் சத்தியசீலன் தலைமை தாங்கினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சென்னை பெஸ்டன் கல்லூரியின் உதவி பேராசிரியர் முனைவர் ஜான்சி பிரியா வருகை தந்து ஆசிரியர்கள் இன்றைய கல்வி திட்டத்தில் தற்போது நவீன தொழில்நுட்பத்துடன் இணைந்து எவ்வாறு மாணவர்களுக்கு தகவல் மற்றும் பாடத்திட்டத்தினை இணைந்து வழங்குவது என்பது பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.

சிறப்பு விருந்தினராக திருவண்ணாமலை அருணை இலக்கிய மன்றம் ஒருங்கிணைப்பாளர் சையத் அஜ்மல் நவீன கணினி யுக்தியின் மாணவர் பாடத்தினை முப்பரிமாண படத்துடன் மற்றும் தகவல்களை அவர்கள் கைபேசியுடன் இணைத்து அவர்கள் ஐயங்களை நீக்குவதற்கு மற்றும் அதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு குறித்தும் விரிவாக விளக்கி பேசினார்.

இந்நிகழ்ச்சிக்கு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளின் முதுநிலை ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

இறுதியில் மின் மற்றும் மின்னணு பொறியியல் துறை தலைவர் சிவக்குமார் நன்றி உரை நிகழ்த்தினார்.

சுற்றுச்சூழல் கதிரியக்கவியலின் கண்காணிப்பு அதன் அளவீடுகள் கருத்தரங்கு

திருவண்ணாமலை கம்பன் மகளிர் கலை கல்லூரி மற்றும் அறிவியல் கல்லூரியில் இயற்பியல் துறை சார்பாக சுற்றுச்சூழல் கதிரியக்கவியலின் கண்காணிப்பு அதன் அளவீடுகள் என்னும் தலைப்பில் ஒரு நாள் பயிற்சி பட்டறை நடைபெற்றது. இப்பயிற்சி பட்டறையில் கல்லூரி துணைத் தலைவர் எ. வ. வே. குமரன் தலைமையிலும் கல்லூரி பதிவாளர் முனைவர் சத்தியசீலன் முன்னிலையிலும் நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் முனைவர் சீதாலட்சுமி வாழ்த்துரை வழங்கினார். இயற்பியல் துறை தலைவர் பிரியா அனைவரையும் வரவேற்றார். இயற்பியல் துறை துணை பேராசிரியர் ஜெனிஃபர் சிறப்பு விருந்தினர் அறிமுக உரையாற்றினார். இக்கருத்தரங்கிற்கு சிறப்பு விருந்தினராக சென்னை எஸ் எஸ் என் கல்லூரியின் இயற்பியல் துறை பேராசிரியர் முனைவர் சந்திரசேகரன் கலந்து கொண்டார்.

அப்போது அவர் கதிர் இயக்கவியலின் தோற்றம் மற்றும் வளர்ச்சி குறித்தும் நம் சுற்றுச் சூழலில் மண் நீர் போன்றவற்றில் யுரேனியம் கதிரியக்க தனிமங்களின் அளவீடுகள் குறித்தும் செயல்முறை விளக்கத்துடன் மாணவிகளுக்கு விளக்கிப் பேசினார். மேலும் சுற்றுச்சூழல் மற்றும் மனித வாழ்க்கையும் எவ்வாறு பாதிப்படைகின்றன என்பதை குறித்தும் விளக்கி கூறினார். கருத்தரங்கில் அனைத்து துறை பேராசிரியர்கள் தலைவர்கள் மாணவிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 29 Feb 2024 3:13 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு