/* */

சமையல் எண்ணெய் சந்தைப்படுத்துதல் மையம் திறப்பு

சமையல் எண்ணெய் சந்தைப்படுத்துதல் மையத்தை முதலமைச்சர் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்

HIGHLIGHTS

சமையல் எண்ணெய் சந்தைப்படுத்துதல் மையம் திறப்பு
X

சமையல் எண்ணெய் தயாரிக்கும் இயந்திரத்தினை தொடங்கி வைத்து பார்வையிட்ட துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி

திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஒன்றியம், வள்ளிவாகை ஊராட்சி, தெள்ளானந்தல் கிராமத்தில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சார்பில் ரூ.3 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட சமையல் எண்ணெய் சந்தைப்படுத்துதல் மற்றும் ஊக்குவிப்பு மையத்தை நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

அதைத்தொடர்ந்து சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, குத்து விளக்கேற்றி, சமையல் எண்ணெய் தயாரிக்கும் இய்ந்திரத்தினை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

தொடா்ந்து, அவா் பேசியதாவது: மணிலா உற்பத்தியில் இந்தியாவிலேயே முதல் மாவட்டமாக திருவண்ணாமலை அறிவிக்கப்பட்டுள்ளது.மணிலாவை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக அதவாது எண்ணெய்யாக மாற்றி விற்பனை செய்தால் அதிக லாபம் கிடைக்கும். வேளாண் பொருட்களுக்கு குறிப்பாக நிலக்கடலை மற்றும் அதன் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களுக்கு உலக அளவில் மதிப்பை உருவாக்க இந்நிறுவனம் ஏற்படுத்தப்பட்டது.

இங்குள்ள விவசாயிகள் கூட்டுறவாக ஒருங்கிணைந்து செயல்பட்டால், விவசாயத்தில் வெற்றிபெறலாம். திருவண்ணாமலையில் டான்காப் என்ற ஆலை ஆரம்பித்தோம். பல்வேறு காரணங்களால் அந்த ஆலை முடப்பட்டது. இப்போது நம் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், சமையல் எண்ணெய் சந்தைப்படுத்துதல் மற்றும் ஊக்குவிப்பு மையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளாா்.இந்த மையம் மூலம் மாவட்டத்தில் உள்ள சுமாா் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பயன் பெறுவா் என்றாா்.

தொடா்ந்து, திருவண்ணாமலை மாவட்ட வேளாண் பொறியியல் துறை மூலம் வேளாண் இயந்திரமயமாக்குதல் திட்டத்தின் கீழ், 50 சதவீத மானியத்தில் ரூ.80 ஆயிரம் வீதம் 10 விவசாயிகளுக்கு ரூ.8 லட்சம் மதிப்பில் பவா் டில்லா் மற்றும் களையெடுக்கும் இயந்திரங்களை தமிழக சட்டப் பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி வழங்கினாா்.

விழாவில் மாவட்ட ஆட்சியா் முருகேஷ், கலசப்பாக்கம் எம்எல்ஏ சரவணன், மாநில தடகள சங்கத்தின் துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், துரிஞ்சாபுரம் ஒன்றியக் குழுத் தலைவா் தமயந்தி, வேளாண் இணை இயக்குநா் அரக்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Updated On: 5 Sep 2023 12:38 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு