/* */

திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் செல்ல சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு

13-ஆம் தேதி பௌர்ணமி கிரிவலம் முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் செல்ல சிறப்பு பேருந்துகள்  அறிவிப்பு
X

திருவண்ணாமலை பஸ் நிலையம் கோப்பு படம்

பஞ்சபூத தலங்களில் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் பக்தர்கள் பௌர்ணமி அன்று கிரிவலம் செல்வது வழக்கம். இங்கு உள்மாவட்டங்களில் மட்டும் அல்லாமல் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். அதிலும் விடுமுறை தினங்கள் மற்றும் விசேஷ தினங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி கொண்டிருக்கிறது. இதனால் கிரிவலத்திற்காக வரும் பொது மக்களுடைய வசதிக்காக விழுப்புரம் மாவட்ட அரசு போக்குவரத்து கழகம் சார்பாக பௌர்ணமி அன்று மட்டும் திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அந்த வகையில் இந்த மாதம் ஜூலை 13ஆம் தேதி பௌர்ணமி என்பதால் கிரிவலத்திற்காக சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.

ஜூலை 13ஆம் தேதி காலையிலிருந்து இரவு வரைக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் சென்னை, கோயம்பேடு, தாம்பரம், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ஆற்காடு, ஆரணி புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல் சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என பக்தர்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Updated On: 10 July 2022 6:59 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு