/* */

சட்டமன்ற சிறப்பு கூட்டம்! சபாநாயகர் அப்பாவு தகவல்!

ஆளுநருக்கு அனுப்பப்பட்ட தீர்மானங்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக நாளை சட்டமன்ற சிறப்பு கூட்டம் நடைபெறும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்

HIGHLIGHTS

சட்டமன்ற சிறப்பு கூட்டம்! சபாநாயகர் அப்பாவு தகவல்!
X

செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு மற்றும் துணை சபாநாயகர் பிச்சாண்டி

சட்டப்பேரவை சாதாரணமானதல்ல சட்டப்பேரவைக்கு என்று இறையாண்மை உள்ளது குடியரசு தலைவர் பற்றியோ ஆளுநர் பற்றியோ பேச சட்டப்பேரவை கூறவில்லை என்று சபாநாயகர் அப்பாவுக்கு தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பத்து மசோதாக்கள் மீது விளக்கம் கேட்டு ஆளுநர் அவற்றை திருப்பி அனுப்பி உள்ளார். இந்நிலையில் ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு மீண்டும் அனுப்ப தமிழக அரசு முடிவு செய்துள்ளது இதற்காக வரும் சனிக்கிழமை சிறப்பு சட்டமன்ற கூட்டம் நடைபெற உள்ளது.

இது குறித்து திருவண்ணாமலை சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது அவர் கூறியதாவது;

தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மீது அனுமதி அளிக்க ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது . ஆளுநருக்கு அனுப்பிய சட்ட மசோதாக்கள் அனைத்தும் தற்போது திரும்பி வந்து விட்டதாக ஒரு தகவல் வந்துள்ளது. ஆகவே அது பற்றி ஆலோசனை மேற்கொள்ள வருகிற சனிக்கிழமை காலை 10 மணிக்கு சட்டமன்ற சிறப்பு கூட்டம் நடைபெற உள்ளது. திருப்பி அனுப்பப்பட்டுள்ள மசோதாக்கள் நீட் விலக்கு உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் அனைத்தும் மீண்டும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்ப தமிழக அரசுக்கு தார்மீக உரிமை உள்ளது,

எந்தவிதமான விவாதம் நடைபெறாது. மசோதாக்கள் மீது தீர்மானம் மட்டும் நிறைவேற்றப்படும். அந்த மசோதாக்களுக்கு உறுப்பினர்கள் ஆதரவளிக்க வேண்டும்.

ஆளுநர் ஏன் ஒப்புதல் அளிக்கவில்லை என தெரியவில்லை. மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல் அமைச்சர், அமைச்சர்கள், பேரவை உறுப்பினர்கள் அனைவரும் நீட் தேர்வு வேண்டாம் என்று சொல்வதற்கு முழு உரிமை இருக்கிறது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

உச்ச நீதிமன்றம் கண்டனம்

சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கவில்லை என, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு விசாரணையில் ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றம் பல்வேறு கருத்துகளை கூறி இருந்தது.

அதன்படி, ’’ஆளுநர் ரவி சட்டசபை மசோதாக்களை நிலுவையில் வைத்திருப்பதாக தமிழ்நாடு அரசு முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் தீவிரமானவை. அரசியல் சாசனம் 200-வது பிரிவின்படி சட்டசபையில் நிறைவேற்றிய அனுப்பிய மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காத நிலையில் மறுபரிசீலனைக்காக கூடிய விரைவில் ஆளுநர் சட்டசபைக்கு திருப்பி அனுப்ப வேண்டும். அப்படி திருப்பி அனுப்புகிற மசோதாவை சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பினால் அதற்கு தாமதம் இல்லாமல் ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும்’’ என்று கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Updated On: 17 Nov 2023 1:24 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  2. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  3. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  4. இந்தியா
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவையடுத்து இந்தியாவில் மே 21 அரசு...
  5. ஈரோடு
    ஈரோட்டில் மென்பொருள் நிறுவன ஊழியர் வீட்டில் 38.5 பவுன் நகை கொள்ளை
  6. லைஃப்ஸ்டைல்
    உலகை மாற்றும் உன்னத சக்தி பெண் சக்தி..!
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் தனியார் இ-சேவை மையங்கள் அதிக கட்டணம் வசூலித்தால்...
  8. லைஃப்ஸ்டைல்
    நண்பனே..எனது உயிர் நண்பனே..! பிறந்தநாள் வாழ்த்து..!
  9. ஈரோடு
    வாக்கு எண்ணிக்கை அன்று கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பான...
  10. தொழில்நுட்பம்
    ஐக்யூ Z9x 5G: இளைஞர் மனம் கவர்ந்த புதிய ஸ்மார்ட்போன்